Jaya TV’s Pongal & Mattup Pongal Spl. Event Stills & News – www.techkashif

Rate this post
Header Aside Logo

Jaya TV’s Pongal Spl. Event Stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

ஜெயா டிவியில் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு ‘மங்க இசையுடன்’ பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது .

காலை 8:30 மணிக்கு நான் நானாக நகைச்சுவை நடிகர் ரெடின் உடன் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி.

காலை 9:00 மணிக்கு புலவர் சண்முகவடிவேல் தலைமையில் நகைச்சுவை பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு நகைச்சுவை அரங்கம்…‘பொங்கும் சிரிப்பு மன்றம்’.

காலை 10.30 மணிக்கு இசைஞானி இளையராஜா பங்குபெறும் புத்தம்புதிய நிகழ்ச்சியின் முன்னோட்டம் ‘கத கேளு, கத கேளு’ ஒளிபரப்பாகிறது .

மேலும் பகல் 12:00 மணிக்கு சமூக வலைதள பிரபலங்கள் பங்கு பெரும் ‘ஜமாய் பொங்கல்’ என்ற விறுவிறுப்பான விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது .

மாலை 5:00 மணிக்கு மகர ஜோதி சபரிமலை ஐயப்பனின் ‘அருளொளி தரிசனம்’ ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது .

————————————————————————————————

ஜனவரி 15 சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 7:30 மணிக்கு பொங்கல் தினத்தன்று வெளியாகும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் நடிகர்கள் சதிஷ், பவித்ரா மற்றும் திரைப்பட குழுவினருடன் ஜாலி சாட் ஒளிபரப்பாகிறது .

காலை 8:30 மணிக்கு ஜெயா டிவியின் சமையல் கலைஞர்கள் பங்குபெற்று கலக்கும் ‘கலாட்டா கிச்சன்’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் .

காலை 9:30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம்.

காலை 11:00 மணிக்கு’வைகறை பொங்கல்’ கிராமிய இசையா? திரை இசையா? கிரேஸ் கருணாஸ் மற்றும்  வேல்முருகன் குழுக்கள் மோதும் போட்டா போட்டி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் .

பகல் 12:00 மணிக்கு ‘RRR ஸ்பெஷல் ஜூனியர் NTR, ராம் சரண் மற்றும் இயக்குனர் ராஜமெளலியுடன் ஓர் ஜாலி சந்திப்பு.

மாலை 5:00 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் அசத்தலான ‘நகைச்சுவை சிரிப்பு மன்றமும் , இறுதி நிகழ்ச்சியாக இரவு 10:00 மணிக்கு ‘சாய் வித் செலிப்ரிட்டி’ இந்நிகழ்ச்சியை நடிகை சாக்க்ஷி அகர்வால் ஜாலியான சாட்டுடன் அடிக்கும் லூட்டி அட்டகாசம், நிறைந்த நிகழ்ச்சியாக அமைந்திருக்கும். .

Stay Tuned with techkashif.in for more Entertainment news.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro
Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Powered By
CHP Adblock Detector Plugin | Codehelppro